Thursday, 15 October 2015

காத்திருத்தல் எனபடுவது யாதெனில்



என்னவளே
'உனக்காக  காத்திருக்கிறேன்' என
எளிதில் முடித்து விடலாம்
அனால் உனக்கு  தெரியுமா
காத்திருத்தல் எனப்படுவது யாதென்று ?


விடியல் வர காத்திருக்கும்
தாமரையை கேள்
இருள் வர காத்திருக்கும்
நிலவை கேள்
அலை வர காத்திருக்கும்
கறையை கேள்
கருத்து வர காத்திருக்கும்
கவியைக்  கேள்
மழை வேண்டி காத்திருக்கும்
உழவனைக்  கேள்
பிள்ளை பிறக்கக்  காத்திருக்கும்
கர்பிணியைக்  கேள்
கூறுவார்கள்
காத்திருத்தல் எனும் தவத்தைப்  பற்றி !


ஓட்ட  பந்தய வீரனுக்கு
வெல்லும் நொடி வ ரை தவிப்பு
எனக்கோ  உன் கரத்தை வெல்ல
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்  தவிப்பு !


நீருள் தவரியவனுகும்
நிலத்தில் மீனுக்கும்
தேவையான மூச்சை போல
பாலைவனத்தில் நீரும்
மரண விளிம்பில்  மனதிடமும்
எவ்வளவு தேவையோ  அதைவிட
தேவை நீ எனக்கு என்றாலும்
உன்  தயக்கத்திற்கு
என் தவிப்புகள்  செய்யும்
தவம் என் காத்திருப்பு !!!

No comments:

Post a Comment